ஆண்கள் அதிக அளவில் ஜங்க் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் விந்தணுக்கள் எண்ணிக்கை 25% வரை குறைவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்கள் எண்ணிக்கை மற்றும் அதன் தரம் குறைதல். இதற்கு நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுகள் தான் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதில் குறிப்பாக பீட்சா, பர்கர், பிரைஸ், ப்ராசஸ்ட்இனிப்பு உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட ஜங்க் ஃபுட் உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறைச்சி உள்ளிட்டவை அடங்கிய ஆரோக்கிய உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை குறைக்கலாம்.