Categories
சினிமா தமிழ் சினிமா

கேள்வி கேட்ட பிக்பாஸையே குழப்பிய ரம்யா… வெளியான இரண்டாவது புரோமோ …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் கன்பெக்ஷன் அறைக்குள் ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனியாக அழைத்து மனம்விட்டு பேச வைக்கிறார். அதில் பேசும்போது போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ தலைவர் பதவிக்கான போட்டியில் அர்ச்சனா வெற்றி பெறுவது போல் வெளியாகியிருந்தது . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் பிக்பாஸ் கன்பெக்ஷன் அறைக்குள் ரம்யா பாண்டியனை அழைக்கிறார். அவரிடம் பிக்பாஸ் வீட்டில் உங்கள் வாழ்க்கை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘யார் கூடயாவது பிடிக்கலன்னா டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவேன்’ என்கிறார் ரம்யா .

பின்னர் ‘கோபம்’ என்ற கேள்விக்கு, ‘எனக்கு எது கரெக்ட் என்று தோணுதோ அதை செய்வேன்’ என்றார் ரம்யா . பின்னர் ‘அழுகை’ என்ற கேள்விக்கு ‘உண்மையான அழுகை ,பொய்யான அழுகை  இரண்டையும் இந்த வீட்டில் பார்க்கலாம்’ என்கிறார் ரம்யா. இதையடுத்து சக போட்டியாளர்கள் பற்றி கேட்கையில் வழக்கம்போல் சிரித்துவிட்டு பின்னர்  பிக்பாஸிடமே கேள்வி கேட்கிறார் ரம்யா. இதனால் பிக்பாஸ் ‘நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல’ என்று கூறுகிறார். இதன் பின் வெளியே வந்த ரம்யாவை ‘பிக்பாஸிடம் கேள்வி கேட்டு அவரையே கன்பியூஸ் செய்து சிரிக்க வைத்திருக்கிறார் ரம்யா ‘ என அனிதா கலாய்க்கிறார்.

 

Categories

Tech |