தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் வேலைவாய்ப்பை பெற லஞ்சம் கேட்பதாக ஆளும்கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், பணியாளர், சங்கத்தை விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நேர்காணல் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் நேர்காணலில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் இது அரசு வேலை என நினைத்து இளைஞர்கள் பணம் கொடுக்க தயாராக இருப்பதால், 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை விண்ணப்பதாரர் இடம் பேரன் நடப்பதாக ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தமிழ் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.