சென்னையில், கள்ளக்காதல் விவகாரத்தில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளியை எழுப்பி, 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ்குமாருக்கு, அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து பலமுறை எச்சரித்தும், இளவரசனின் மனைவியை சந்திப்பதை அவர் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் இளவரசன் வீட்டில் இல்லாதபோது, அவரது மனைவியை பார்க்க சந்தோஷ்குமார் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த இளவரசன், சந்தோஷ்குமாரை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, எழும்பூர் பகுதியில் இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த சந்தோஷ்குமாரை எழுப்பிய இளவரசன், அவரை நிலை குலைய வைத்து, அவரது கழுத்தை சரமாரியாக அறுத்து படுகொலை செய்துள்ளார். படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்த சந்தோஷ்குமாரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம், தலைமறைவான இளவரசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை காவல்துறை செய்தது.