மது குடிப்பவர்களுக்கு ஏழு வகையான புற்றுநோய்கள் வரும் ஆபத்து அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அதில் வரும் ஆபத்துக்கள் பற்றி அவர்கள் அறிவதில்லை. மது குடிப்பது ஏழு வகையான புற்று நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அடிக்சன் மருத்துவ ஆய்விதழில் வெளியான முடிவில், மது குடிப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது.
மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. எந்த அளவு மது குடித்தாலும் அது தொடர் பழக்கமாக இருக்கும் நிலையில், ஆபத்தில்லாத குடிப்பழக்கம் என எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் மது குடிப்பவர்களுக்கு கட்டாயம் ஏழு வகையான புற்றுநோய்கள் வரும் ஆபத்து அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.