Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஜனவரி 15 முதல்… பள்ளிகளில் வகுப்பு தொடக்கம்… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் பகுப்பு தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜனவரி 10ஆம் தேதிக்குள் 7500 பள்ளிகளில் பயிற்சியாளர்களுடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடம் தொடங்கப்படும். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் ஐஏஎஸ் படிப்பவர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு தமிழக பாட புத்தகம் சிறப்பாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |