தமிழக மக்கள் பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்தல் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எம்ஜிஆர் பற்றி கமல் பேசிவருவது அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ‘பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும். அப்படி ஒரு நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக தொகுத்து வழங்கி அனைத்துக் குடும்பங்களையும் கெடுத்து வருகிறார்”என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் கமல் படங்களில் எம்ஜிஆர் படத்தைப் போல நல்ல கருத்துக்கள் இல்லை என்றும் சினிமா மூலமும் அவர் மக்களைக் கெடுக்கிறார் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.