சமையல் எண்ணையை சில்லறை விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்துள்ளது. இந்த வழக்கானது நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய மொத்தம் எத்தனை ஆய்வுகள் உள்ளன? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் சமையல் எண்ணெய் ஆய்வில் கடந்த 5 வருடங்களாக எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது? இதுபோன்று மாவட்ட வாரியான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் இனி சமையல் எண்ணையை சில்லறை விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் ஜனவரி 18ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.