புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று சூரிச் மருத்துவமனை கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் செய்தி தொடர்பாளர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மருத்துவமனைகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் நிரம்பி உள்ளது. இதனால் மேலும் பட்டாசுகளை வெடித்து காயமடைந்து வருபவர்களையும் மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள முடியாது.
இதனால், வரும் புத்தாண்டில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்து விபத்து தடுப்பு அலுவலகம் கூறுகையில், வருடந்தோறும் பட்டாசுகளை வெடிப்பதனால் மட்டுமே காயமடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆகும் என்று அறிவித்துள்ளது.