Categories
சினிமா தமிழ் சினிமா

டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவலை பகிர்ந்த விஷ்ணு விஷால்… என்ன தெரியுமா?…!!!

நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது இவர் நடிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இந்நிலையில் இவர் நடிக்காத படம் ஒன்றின் விளம்பரம் குறித்த தகவல் இணையத்தில் பரவியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது . அதில் ‘இந்த படத்தில் நடிக்க விரும்புவர்கள் தன்னை அணுகலாம் என்றும் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற விரும்புவோர் நேரில் தொடர்பு கொண்டால் இது குறித்த விவரங்களை தர தயார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தயவுசெய்து நடிக்க ஆர்வம் உள்ள புதுமுக நடிகர், நடிகைகள் இதுபோன்ற தவறான விளம்பரத்தை பார்த்து ஏமாந்து விட வேண்டாம் . இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . மேலும் நான் எனது சொந்த பேனரில் நடிக்கும் படங்களை தவிர வேறு எந்த படத்திலும் இப்போதைக்கு நடிக்கவில்லை . இது ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி என தெரிகிறது. விரைவில் இது குறித்து புகார் அளிக்க ஆலோசனை செய்து வருகிறோம்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |