கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது முதல் உலகப்போர் பீரங்கி கிடைத்துள்ளது அபூர்வ கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் Amherstburg என்ற நகரில் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அங்கு கிடைத்தது வெடிகுண்டும் இல்லை, புதையலும் இல்லை. ஆனால் கிடைத்தது என்ன தெரியுமா? முதலாம் உலகப் போர் கால ஜெர்மனிய பீரங்கி ஒன்று கிடைத்துள்ளது. தொடப்பட்ட பள்ளத்தில் வெடிகுண்டு பீரங்கி கிடைத்துள்ளது ஒரு அரிய அபூர்வ கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பீரங்கிகள் இப்போது உலகில் அதிகமாக இல்லை என்றும் ஊழியர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் Amherstburg நகர அதிகாரிகள், அருங்காட்சியகத்தில் இந்த பீரங்கியை என்ன செய்வது? எங்கே வைப்பது? என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.