கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களால் பிணவறை நிரம்பியுள்ளதால் கன்டெய்னரில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியிலுள்ள பிராங்க்பர்ட் என்ற நகருக்கு சுமார் பத்து மைல் தூரம் தொலைவில் உள்ள நகர் Hanau. இந்நகரில் உள்ள பிண அறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை வைத்துள்ளதால் நிரம்பியுள்ளது. எனவே மேலும் இறந்தவர்களின் உடல்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிணவறையில் பணியாற்றும் ஊழியர்கள் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் உடல்களை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் ஜெர்மனியில் மட்டும் கடந்த புதன்கிழமை அன்று கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 956 ஆகும். இதனைத் தொடர்ந்து நேற்றும் 698 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஐரோப்பாவிலும் நேற்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.