எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள்தான் வாரிசு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் வாரிசு கிடையாது. அவர்கள் இருவருக்குமே தமிழக மக்கள்தான் வாரிசு. அவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். களத்தில் இறங்கி மக்களை சந்திப்பது பெரிதா? அல்லது வீட்டிலேயே இருந்துகொண்டு அறிக்கை மட்டும் விடுவது பெரிதா? ” என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.