கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டன. தமிழக அரசும், மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்த பல பகுதிகளில் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 9 மாதத்திற்கு பின்பு திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர் கோவிலில் மொட்டை அடிப்பது, காதுகுத்துதல் போன்றவற்றுக்கு தடை தொடர்கிறது எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.