இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் 97 சதவீத மாணவர்கள் தோல்வியை சந்தித்தது மாணவர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரிகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா நோய் தொற்றின் பரவலால் நடைபெறவில்லை. மாணவ மாணவிகளுக்கு கடைசி ஆண்டு செமஸ்டர் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் வழங்க அறிவித்திருந்தது. அதன்பின் மாணவர்கள் தங்களது இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதி வருகின்றனர். அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்காக தேர்வு கொரோனா காலக்கட்டத்தில் நடந்தது. செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை இத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கிட்டத்தட்ட 7000 பேர் தேர்வு எழுத கலந்து கொண்டனர். ஆனால் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் கொரோனா காலகட்டத்தில் நேரடித் தேர்வு தேவையில்லை எனவும், ஆன்லைனில் தேர்வு நடத்தவேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து, பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
.அதற்குப் பிறகு தேர்வுத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்த தேர்வாளர்கள் நேரடித் தேர்வு வேண்டாம் என்று கூறினர். ஆனால் தேர்வுத்துறை தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் தங்களது தேர்வை நேரடியாக எழுதி சென்றனர். இந்தத் தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில்2.5 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும், 97.5 சதவீதம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருந்தது.
இத்தகவல் மாணவர்களுக்கிடையே மிகவும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் கொரோனா காலத்தில் கல்லூரி உட்பட அனைத்து பள்ளி தேர்வுகளும் நடத்தாமல் இருக்கிறது. இதில் விதிவிலக்காக தங்களுக்கு எந்த ஒரு கருணையும் காட்டாமல் தேர்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.