Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிரிச்சு பேசினது பிடிக்கல…. பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரை…. கத்தியால் குத்திய கொடூரம்….!!

சென்னையில் மீன்பாடி வண்டி ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சென்னையில் உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(33). இவர் மீன்பாடி வண்டி ஓட்டுநராக பணி புரிந்து வந்தார் . இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் சந்தோஷ்குமார் தன்னுடைய  மகனை சகோதரி வீட்டில் தங்க வைத்திருந்தார் . தனியாக இருந்த அவர்  தினமும் வேலை முடிந்த பிறகு அங்குள்ள தியேட்டர் அருகில் இருக்கும் பிளாட்பாரத்தில் தூங்குவார். இந்நிலையில் நேற்று காலையில் சந்தோஷ்குமார் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது . தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்தோஷ் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் .ஆனால் அவர்  மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சந்தோஷ் குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தது அதே பகுதியில் வசிக்கும் இளவரசன்(21) மற்றும் அருண்(20) என்று தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும்  பழைய பேப்பர் பொறுக்கும் தொழிலை செய்து வந்தனர். இளவரசனின் மனைவியிடம் சந்தோஷ்குமார் அடிக்கடி சிரித்து பேசியுள்ளார். அது பிடிக்காமல் சந்தோஷ்குமாரிடம் இளவரசன்  அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதைப் பொருட்படுத்தாமல் சந்தோஷ்குமார் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த இளவரசன் தனது நண்பருடன் சேர்ந்து சந்தோஷ் குமாரை கத்தியால் குத்தியுள்ளனர் . இந்த தகவலை விசாரணையில்  இளவரசன் வாக்குமூலமாக கொடுத்தார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |