Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (19-12-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

19-12-2020, மார்கழி 04, சனிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.14 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.

அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.40 வரை பின்பு சதயம்.

சித்தயோகம் இரவு 07.40 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் –  19.12.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் உற்சாகம் பிறக்கும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் மாற்றங்கள் உண்டாகும். எதிரிகளால் இருந்த தொல்லைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல்நிலை சீராக இருக்கும். புதிய வீதியில் எடுக்கும் முயற்சி உறுதுணையாக அமையும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் யாவும் நீங்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் சோர்வு சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். நண்பர்களின் ஆலோசனை உத்தியோகத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும்.தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நல்லது. கடன் தொல்லை தீரும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் சுறுசுறுப்பில்லாமல் இருப்பீர்கள். மருத்துவச் செலவு கூடும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக கூடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். கவனம் எந்த ஒரு விஷயத்திலும் வேண்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு சுப செலவுகள் இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்தி வரும். ஆடம்பர பொருட்களை வாங்க ஆர்வம் கூடும்.உத்தியோகம் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றியை தரும். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்வீர்கள். உத்யோகத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். குழந்தைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். நல்ல பலனை அடைவீர்கள்.

துலாம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்க கடினம். குழந்தைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை உத்தியோகத்திற்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் வீண் செலவுகள் இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் குறையும். எந்த செயலிலும் நிதானம் எச்சரிக்கை அவசியம்.

தனுசு

உங்களின் ராசிக்கு மன அமைதி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு விலகும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.உத்தியோகத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் இடையூறு இருக்கும். தொழிலில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறையும்.உத்தியோகத்தில் கூட்டாளியின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஆதரவும் உண்டாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை சீராக இருக்கும். வெளியூர் பயணம் செல்லக்கூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பழைய பாக்கியம் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய பொருள் வாங்கும் ஆர்வம் கூடும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத டென்ஷன் இருக்கும்.குழந்தைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். தொழிலில் மந்த நிலை உண்டாகும்.உடன் இருப்பவரிடம் விட்டுக்கொடுத்து சென்றால் சிக்கல்கள் நீங்கும். தெய்வ வழிபாடு ஈடுபாடு அதிகரிக்கும்.

Categories

Tech |