தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி நாளை காலை பெரிய சோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். வருகின்ற ஜனவரி முதல் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் தொடங்க உள்ளார்.