Categories
சினிமா தமிழ் சினிமா

ஏன் இந்த திடீர் மாற்றம்?… ஆரி மற்றும் ரியோவிடம் மன்னிப்பு கேட்ட பாலாஜி… வெளியான மூன்றாவது புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ் . இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் வந்துகொண்டே இருக்கிறது . திடீரென சுறுசுறுப்பாகவும் காமெடியாகவும் இருக்கும் பாலாஜி சட்டென்று கோபப்பட்டு விடுவார் . பின்னர் வார இறுதியில் மன்னிப்பும் கேட்டு விடுவார். நேற்றைய எபிசோடில் கூட ஆரியை பற்றி குறை கூறிக் கொண்டிருந்த பாலாஜி தற்போது சட்டென்று மனம் மாறியுள்ளார் . இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பாலா ‘நான் ஆரி மற்றும் ரியோவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை பார்த்த பின் இந்த நிலைமைக்கு வந்திருப்பீர்கள். ஆனால் நான் இனிமேல் தான் பார்க்கப் போகிறேன். எனக்கு அந்த அளவுக்கு தகுதி இருக்குதான்னு தெரியவில்லை . ஒருத்தர கை கொடுத்து தூக்கி விடுவதை விட்டுவிட்டு கீழே, இழுத்து விடுற மாதிரி எனக்கு தோணுது . அதனால  இந்த இரண்டு பேரிடமும் சாரி கேட்டுக்கிறேன்’ என்று கூறுகிறார். இந்த முறை பாலாஜியின் மனமாற்றம் உண்மையானதா? அல்லது பொய்யானதா? என்று பிக்பாஸ் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Categories

Tech |