தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை முதல் மாநிலத்தின் பல்வேறு பல பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அந்த நேரத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் தொடரும் என்றும்தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.