தமிழகத்தில் அரசுப் பணிகளுக்காக புதிதாக 484 இடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு தேவையான வேலையாட்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி காலியாக உள்ள அரசு பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். இந்நிலையில் அரசு பள்ளிகளில் நிர்வாகம், அலுவலகம் தொடர்பான பணிகளுக்காக புதிய 484 இடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 389 இளநிலை உதவியாளர், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
அவை டிஎன்பிஎஸ்சி மூலம் விரைவில் பணி நியமனங்கள் நடைபெறும். மேலும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் தொய்வின்றி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பட்டதாரிகள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.