நச்சலூர் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மருதை – பாசிபதம் . மருதை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் பாசிபதம் தனது மகன்களான சோமன்(50) மற்றும் மலையாளம்(42) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் அப்பகுதி முழுவதும் ஈரப்பதமாக இருந்ததுள்ளது. இதையடுத்து பாசிபதம் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது அவருக்கு நிலைதடுமாறியதால் கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மின் இணைக்கப்பட்ட இரும்பு குழாயை கையில் பிடித்துள்ளார் .
அப்போது எதிர்பாராதவிதமாக பாசிபதம் மீது மின்சாரம் பாய்ந்தது . இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வருவாய் அதிகாரியும் கிராம நிர்வாக அதிகாரியும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.