Categories
உலக செய்திகள்

“உயிருக்கு ஆபத்தான நூடுல்ஸ்” இனி வேண்டாம்…. என்ன நடக்கும் தெரியுமா…??

அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவது நம் உயிருக்கே  ஆபத்து ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பொதுவாக உலக அளவில் நம் இந்திய உணவிற்கு என்று ஒரு தனி பெரும்பான்மை மற்றும் அங்கீகாரம் உள்ளது. ஆனால் தற்போது அந்த நிலை இந்தியாவிலேயே மெல்ல மெல்ல மாறிவருகிறது என்பது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக நாம் நம் பகுதியில் உள்ள கடை வீதிக்கு சென்று திரும்பும் போது பார்த்தால் பெரும்பாலும் சைனீஸ் வகை உணவு கடைகள் இருக்கின்றன. மக்களும் அதைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதற்கு  காரணம் சீனர்கள் அதிகம் அந்த உணவை உண்பது கிடையாது என்பதே ஆகும். மாறாக நம் இந்தியர்கள் அவ்வகையான உணவிற்கு மாறுகின்றனர்.

பாஸ்ட்புட் உணவு வகைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இதை தான் அதிகமாக கொடுத்து வருகின்றனர். ஆனால் இது குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. மைதாவால் ஆன நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளூட்டமேட் என்னும் நம்மை அடிமையாக்கும் சுவையூட்டிகள் இருக்கின்றன. இத்தகைய நூடுல்சை நாம் உட்கொண்டால் அது உயர் ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும். பிசுபிசுவென இருக்கும் இந்த நூடுல்ஸ் நம்முடைய உடல் உறுப்புகளின் உட்புறமாக ஒட்டிக் கொள்ளும். மேகியை நம்பி வாழ்பவர்களுக்கு செரிமான அமைப்பில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால் வயிற்று வலி, ஈரல் மற்றும் கணைய பிரச்சினைகள் ஏற்படலாம். இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆரோக்கியமற்ற ஒரு உணவாக இருக்கிறது. நூடுல்சை அடிக்கடி நாம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு மலக்குடல் புற்று நோய் வர வழிவகுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மூளையின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வளர்ச்சியை அதிகமாக பாதிக்கும். எனவே நம்மால் முடிந்த அளவு நூடுல்சை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக இந்திய உணவான நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம்.

Categories

Tech |