பாரிஸ் நகரில் முதன் முறையாக பெண்களுக்கான பேஷன் ஷோ பாலைவனத்தில் நடந்தது வரவேற்பை பெற்றுள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு வருடமும் ஃபேஷன் ஷோ நடத்தப்படுவது வழக்கம். அது மக்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் நடத்தப்படும். அதன்படி பாரிஸ் நகரில் முதல் முறையாக பெண்களுக்கான பேஷன் ஷோ பாலைவனத்தில் நடைபெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா எதிரொலியால் பார்வையாளர்கள் இன்றியும், வித்தியாசமாகவும் நடத்துவதற்கு திட்டமிட்ட ஃபேஷன் ஷோ குழுவினர் பாலைவனத்தில் நடத்தியுள்ளனர்.
அங்கு பெண்கள் அனைவரும் மணலில் கேட்வாக் செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை மற்ற நாடுகள் அனைத்தும் வியப்புடன் பார்த்து வருகின்றன. ஒரு புதுவித முயற்சியாக இது நடத்தப்பட்டுள்ளதாக ஃபேஷன் ஷோ குழுவினர் தெரிவித்துள்ளனர்.