Categories
உலக செய்திகள்

செல்ல பிராணிகளுக்கு…. மருத்துவர் கட்டிய…. கல்லறைதோட்டம் ..!!

மருத்துவர் ஒருவர் செல்ல பிராணிகளுக்கு தனியாக கல்லறை கட்டிய சம்பவம் பலரது  பாராட்டை  பெற்றுள்ளது. 

மியான்மர் நாட்டிலுள்ள டாக்டர் டின் கூடுன் நயிங் என்பவர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் இறந்தால் அதனை புதைப்பதற்காக தனியாக கல்லறை ஒன்றை கட்டியுள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் 2015-ம் வருடம் இறந்துவிட்டது. அவர் அந்த நாயை நல்ல இடத்தில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார்.

வழக்கமாக அந்த நாட்டில் செல்லப்பிராணிகள் உயிரிழந்தால் தோட்டம் அல்லது குப்பை மேடுகளில் போட்டுவிடுவார்கள். ஆனால் 15 வருடகாலம் பாசமாக வளர்த்த தன் நாயை அப்படி செய்ய அவருக்கு மனம் வரவில்லை. அதனால் அதனை அடக்கம் செய்வதற்கு நல்ல  இடமாக தேடி வந்துள்ளார். இந்நிலையில் எங்கு தேடியும் நல்ல  இடம் கிடைக்காததால், ஊருக்கு நடுவில் உள்ள ஒரு இடத்தை சொந்தமாக வாங்கி அதில் தன் செல்ல பிராணிக்கு  கல்லறை ஒன்றை கட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டிலுள்ள வேறு செல்லப் பிராணிகள் இறந்தாலும் அதற்கும் கல்லறை கட்ட அனுமதியளித்தார். அந்தக் கல்லறையில் தற்போது 300க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் சில பூனைகள் மற்றும் ஒரு முயலுக்கு சமாதி கட்டப்பட்டுள்ளது.

இப்போது இந்த கல்லறையை ஒரு குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். இதில் தற்போது  செல்லப்பிராணியை அடக்கம் செய்ய 70 அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டு வருகிறது. செல்ல பிராணிகளுக்கு கல்லறை கட்டிய டாக்டர் டின் கூடுன் பலரால் பாராட்டபட்டு வருகிறார். மேலும் சமூக வலை தளங்களில் இச்செய்தி வைரலாகி வருகிறது.

Categories

Tech |