இந்நிலையில், நேற்று கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்ட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் மாணவர் அணி அமைப்பினர் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Categories