Categories
தேசிய செய்திகள்

பிரதமர் அலுவலகத்தை…. OLX தளத்தில் விற்பனை…. 4 நபர்கள் கைது…!!

பிரதமரின் அலுவலகத்தை OLX தளத்தில் விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

வாரணாசி தொகுதியில் மக்களவை உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை சில மர்மநபர்கள் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் அதை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு தருவதாக பதிவு செய்துள்ளனர். இந்த அலுவலகமானது ஜவகர் பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்து  விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் அடிப்படையில் ஓஎல்எஸ் தளத்தில் பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை விற்பனைக்கு தருவதாக 4 பேர் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் நான்கு அறைகள், நான்கு பாத்ரூம்கள் கொண்ட வில்லா விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர். மேலும் இதன் விலை ரூ 7.5 கோடி ரூபாய் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். யாருமே முதலில் இதை கவனிக்காத நிலையில் பொதுமக்கள் பலரும் அந்த விளம்பரத்தை கவனித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த விளம்பரத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். பின்னர் அந்த விளம்பரமும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |