மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனை நடிகை விந்தியா டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் முதல்வர் பழனிசாமிக்கு இடையே கடும் வார்த்தைப் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை விந்தியா கமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “இந்த உத்தம வில்லன் ஊத்திமூடின படம்னு ஊருக்கே தெரியும். பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை. அந்த மாதிரிதான் நீங்க டம்மியா முடிவு எடுக்க முடியாம அடிமை வேலை பாக்குற பிக் பாஸ், விஜய் டிவிக்கு viewership ஏத்தரத விட்டுட்டு உங்களை நம்பி நாசமா போனா தயாரிப்பாளர்களை வாழ வைக்கிற வழி பாருங்க” என்று விமர்சித்துள்ளார்.