Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை… முதல்வர் ஈபிஎஸ் அந்தர்பல்டி…!!!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அந்தர்பல்டி பதிலை தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அளித்த பேட்டியில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு இன்னும் அதை எடுத்துக் கொள்ளவில்லை என்று அந்தர் பல்டி பதிலை தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த பதிலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |