நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தைப் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.
நடிகை ஷகிலா மலையாள திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்து புகழ் பெற்றார். தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார் . ஹிந்தி மொழியில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, கன்னட மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை பற்றி பத்திரிகையாளர்களுக்கு நடிகை ஷகிலா பேட்டி அளித்துள்ளார் . அதில் ‘எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகளுக்கு நான் சொல்கிறேன் . என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் . அதைதான் என் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன் . இதைதான் படமாகவும் எடுத்திருக்கிறார்கள் . இந்தப்படம் பெண்களுக்கு ஒரு மேசேஜாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.