நடிகர் அதர்வா ‘தள்ளிப்போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அதர்வா . இவர் தனது அயராத உழைப்பால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து இவர் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் . தற்போது அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் திரைப்படம் தயாராகியுள்ளது .இந்தப் படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Welcoming the year 2021 with a whole lot of love & positivity ! #ThalliPogathey #ThalliPogatheyFromJanuary pic.twitter.com/3X8aIeIeVA
— Atharvaa (@Atharvaamurali) December 18, 2020
இந்நிலையில் அதர்வா நடிப்பில் தயாராகியுள்ள ‘தள்ளிப்போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருப்பதாக அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நின்னுக்கோரி படத்தின் ரீமேக் . இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் அமிதாஷ் பிரதான், ஆடுகளம் நரேன் ,ஜெகன், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.