Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடையை மீறி “எருதுகட்டு விழா”… காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்..!!

மதுரையில் உரிய அனுமதி பெறாமல் எருது கட்டு விழாவை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அலங்காநல்லூர் அருகே பொதும்பு என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள கலியுக மெய் அய்யனார் சுவாமி கோவிலில் வெகு சிறப்பாக திருவிழா நடைபெற்று வந்தது . இந்த திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எருதுகட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று எந்தவித உரிய அனுமதி பெறாமல் எருதுகட்டு விழாவினை அக்கிராம மக்கள் நடத்தியுள்ளனர்.

இந்த விழாவில் மொத்தம் 14 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது . மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் விழாவில்  கலந்து கொண்டு கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.  இதற்கிடையில் விழா கமிட்டியை சேர்ந்த 12 பேர் மீது காவல்துறையினர்  தடையை மீறி விழாவை நடத்துதல் மற்றும் நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |