Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டுக்கு மாட்டு சாணத்திலேயே பெயிண்ட் அடிக்கலாம்… மத்திய அரசின் அடுத்த திட்டம்..!!

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கட்கரி, “காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் மூலம் செய்யப்படும் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட ‘வேதிக் பெயிண்ட்’ விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் சூழலியல் சீர்கேடு இல்லாத வகையிலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் ‘வேத பெயிண்ட்’ கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.55,000 கூடுதல் வருமானம் கிடைக்கும் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கைப்பை, பைகள், பொம்மைகள், முக கவசம் என மாட்டுச்சாணத்தில் பல்வேறு பொருட்களை அறிமுகம் செய்த மத்திய அரசு அடுத்தாக மாட்டு சாணத்தில் பெயிண்ட் தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |