பாகற்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள் :
பாகற்காய் – அரை கிலோ
வெல்லம் – 100 கிராம்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பாகற்காயை எடுத்து விதைகளை நீக்கியபின், சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பின்பு மிக்சிஜாரில் வெல்லத்தை போட்டு தூளாக அரைத்து எடுத்து வைக்கவும்.
பிறகு பாத்திரத்தில் புளியை எடுத்து, தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து, வடிகட்டி எடுத்து வைக்கவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் புளி கரைசலை ஊற்றி, நறுக்கிய பாகற்காய் துண்டுகளை போட்டு நன்கு வேக வைக்கவும்.
மேலும் பாகற்காய் நன்கு வெந்ததும், அதில் மிளகாய் தூள், தனியா தூள், அரைத்த வெல்லத்தை போட்டு கலந்து நன்கு கெட்டியாக வேகும் வரை நன்கு கிளறி விடவும்.
அதன் பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலையை போட்டு தாளித்து, வேக வைத்த பாகற்காய் பச்சடியில் சேர்த்து, சிறிது கிளறி பரிமாறினால் ருசியான பாகற்காய் பச்சடி ரெடி.