முடி உதிராமல் வளர்வதற்கு இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
முந்தைய காலத்தை காட்டிலும் இன்றைய காலக்கட்டத்தில் நீளமான கூந்தல் உள்ள பெண்களை பார்க்க முடிவது இல்லை. இதற்கு முக்கிய காரணம் சீரற்ற பராமரிப்பு முறை. கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு. அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு. அதனை பார்ப்போம் .
அதிகம் எண்ணெய் தேய்ப்பது:
அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பது தெரியுமா? எண்ணெய் தேய்ப்பது என்பது மிகவும் நல்லது. ஆனால் கூடுதலாக எண்ணெய் தேய்த்தால் அது பாதிப்பை ஏற்படக்கூடும். அதிகமான எண்ணெய் தேய்க்கும் போது, சரும துளைகள் மூடிக்கொள்ளும். அதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.
முடி உதிர்வுக்கான காரணங்கள்:
கூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டுவிட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும்.
குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்க்கவும்:
தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும். இதற்கு மேல் எண்ணெய் பசை தலையில் இருக்குமேயானால், அவை கூந்தலுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தக்கூடும். இதுப்போன்ற அதிகப்படியான எண்ணெய் பசை தலையில் சேருவதால் தான் முகத்தில் பரு போன்ற பிரச்சனை உருவாகிறது.
நேரடியாக முடியில் எண்ணெய் தேய்ப்பது:
பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்த உடனேயே மசாஜ் செய்து விடுவர். இதனால் முடி கொட்ட தான் செய்யும். முதலில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு கூந்தலை சிக்கலின்றி சீவிவிட வேண்டும் . அதன் பின் எண்ணெய் தொட்டு மெதுவாக கைகளால் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் முடி கொட்டுவது குறையும் அல்லது முடி கொட்டாது.
விரல்களால் எண்ணெய் தேய்க்கவும்:
பெரும்பாலானோர், எண்ணெயை கையில் ஊற்றி உள்ளங்கைகளில் தேய்த்து அப்படியே தலையில் தேய்ப்பதை வழங்கமாக கொண்டிருப்பர். இப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். எப்போதும், எண்ணெயை ஒரு பவுளில் ஊற்றி அதை விரல்களால் தொட்டு, மெதுவாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முடி கொட்டாமல் இருப்பதோடு, அனைத்து ஊட்டச்சத்துக்களும், கூந்தலுக்கு முழுவதுமாக கிடைக்கப்பெறும்.
எண்ணெய் தேய்த்தவுடன் முடியை கட்டக்கூடாது:
இந்த பழக்கம் அனைத்து பெண்களுக்கு இருக்கும். எண்ணெய் தேய்த்து கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் முடியை தூக்கி கட்டிக்கொண்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவர். இது மிகவும் தவறான செயல். எண்ணெய் தேய்த்தவுடன் ஸ்கால்ப்பானது மிகவும் மிருதுவாக இருக்கும். அதுபோன்ற சமயத்தில் கூந்தலை இறுக்கமாக தூக்கி கட்டும் போது, கூந்தல் அதிகமாக உதிர தான் செய்யும்.