புளி – தேவைக்கு
உப்பு, மஞ்சள்பொடி – தேவையான அளவு
கடுகு – தாளிக்க
நெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைபிடி
வறுத்துப் பொடிக்க:
துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி
தனியா – 2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கண்ட திப்பிலி – 10 கிராம்
சுக்கு – சிறிதளவு
பெருங்காயம் – தேவைக்கு
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், துவரம் பருப்பு, தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,கண்ட திப்பிலி, சுக்கு, பெருங்காயம் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
பின்பு ஆற வைத்த கலவைகளை மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் புளியை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் புளி கரைசலை ஊற்றி, அதனுடன் உப்பு, மஞ்சள் பொடியை சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும்.
மேலும் புளி கலவை நன்கு கொதித்ததும், அதில் வறுத்துஅரைத்த கலவையை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நுரைத்து கொதிக்க ஆரம்பிக்கும் இறக்கி விடவும்.
இறுதியில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலையை சேர்த்து தாளித்ததும், அதை கொதிக்க வைத்த கலவையில் கொட்டியபின், கரண்டியால் சிறிது கிளறியபின் சாதத்துடன் பரிமாறினால் ருசியான கண்டதிப்பிலி ரசம் ரெடி.