பேரீச்சம்பழ தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
புளிக்காத தயிர் – 2 கப்
பேரீச்சம்பழம் – 10
முந்திரி – 8
மாதுளை முத்துக்கள் – கால் கப்
ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – சிறிது
தேன் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளிக்காத தயிரை எடுத்து கெட்டியில்லாமல் நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் மாதுளை பழத்தை எடுத்து அதில் உள்ள முத்துகளை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பின்பு முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
மேலும் கலக்கி வைத்த தயிரில் ஃப்ரெஷ் க்ரீம், நறுக்கிய முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சிறிது உப்பு, ருசிக்கேற்ப தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கியபின், அதை ஒரு கிளாஸிலோ அல்லது பவுலிலோ ஊற்றி பரிமாறினால், ருசியான பேரீச்சம்பழ தயிர் பச்சடி ரெடி.