வேர்க்கடலைக் கூழ் செய்ய தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை – 1 கப்
கருப்பட்டி – 1 கப்
வாழைப்பழம் – 2
செய்முறை :
முதலில் வேர்க்கடலையை பாத்திரத்தில் எடுத்து, தண்ணீர் ஊற்றி, சுத்தம் செய்து 6 மணி நேரம் நன்கு ஊறவைத்து கொள்ளவும். பின்பு வாழை பழத்தை எடுத்து, தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
மேலும் மிக்சிஜாரில் ஊறவைத்த வேர்க்கடலை, கருப்பட்டி, நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு மையாக அரைத்து எடுத்து, கிளாசில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து, சில மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறினால் ருசியான நிலக்கடலை கூழ் தயார்.