Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வெயில் காலத்துக்கு இதமான… ஜில்லுன்னு ஒரு ரெசிபி..!!

 தயிர் வடை செய்ய தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு                  – 1 கப்
பச்சை மிளகாய்                   – 2
இஞ்சி                                        –  சிறு துண்டு
தேங்காய்த் துருவல்          – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு                                           – தேவையான அளவு
எண்ணெய்                             – தேவையான அளவு
தயிர்                                          – 2 கப்

அலங்கரிக்க:

கொத்துமல்லி தழை       – சிறிது (பொடியாக நறுக்கியது)
கேரட் துருவல்                   – 1 டேபிள்ஸ்பூன்
காராபூந்தி, ஓமப்பொடி  – சிறிதளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் உளுத்தம் பருப்பை எடுத்து,தண்ணீர் ஊற்றி, 4 மணி நேரம் நன்கு ஊற வைத்தபின், அதை மிக்சிஜாரில் போட்டு நன்கு கெட்டியான பதத்தில் மையாக அரைத்து எடுத்ததும், அதில்  உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

பின்பு தேங்காயை எடுத்து நன்கு துருவி கொள்ளவும். பிறகு இஞ்சியை எடுத்து சுத்தம் செய்து, துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். மேலும் துருவிய தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் மற்றொரு பாத்திரத்தில் தயிரை எடுத்து  நன்கு கடைந்ததும், அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, சிறிது உப்பு சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த உளுந்த மாவை சிறிதளவு எடுத்து உருட்டியததும்,  அதை மேதுவாக விரல்களால், சிறிது அழுத்தி, அதன்  நடுவில் துளையிட்டு அப்படியே அதை, கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து ஆற வைக்கவும்.

மேலும் பொரித்தெடுத்த வடைகள் நன்கு ஆறியதும் அதை கலந்து வைத்த தயிரில் போட்டு அரை மணி நிமிடம் நன்கு ஊற வைக்கவும். பிறகு அதை பரிமாற எடுக்கும் போது, அதன் மேல் காராபூந்தி, ஓமப்பொடி, துருவிய கேரட், நறுக்கிய கொத்துமல்லித் தழையை  தூவி பரிமாறினால் ருசியான தயிர் வடை ரெடி. இதை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

Categories

Tech |