Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவன் கொலை; மனைவி ஆத்திரம் …!!

கமுதி அருகே மது போதையில் தினசரி சண்டையிட்டு வந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்த பெருமாள், இவரது மனைவி அம்பிகாவதி. இவர் மதுபோதையில் தனது மனைவியுடன் தினசரி தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஆனந்த பெருமாள் தனது மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து இருக்கின்றார்.

இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி, அம்மிக் குழவிக் கல்லை எடுத்து ஆனந்தப்பெருமானின் தலையில் போட்டு உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி அம்பிகாபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் நடந்த சண்டையால் கணவன் தலையில் மனைவியே அம்மிக்கல்லை போட்டு கொன்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |