Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யானையை நோட்டமிட்ட புலி சுற்றுலா பயணிகள் பீதி …!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சாலையில் யானையை படம்பிடிக்கும் போது யானையின் பின்னால் புலி இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு சாலையோரத்தில் நின்று இருந்த யானையைப் படம் பிடித்த சுற்றுலா பயணிகள், அதை படம் பிடித்தபோது யானையின் பின்னால் புலி ஒன்று இருப்பதையும் கண்டனர். ஒரே இடத்தில் யானையும், புலியும் கண்ட சுற்றுலா பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் அவர்களுக்கு அச்சமும் ஏற்பட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |