60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன . இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன . தற்போது தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல் படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்களில் 60 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மெரிட் லிஸ்ட் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது