தற்போது கூடுதலாக இரண்டு புதிய அம்சங்கள் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வாட்ஸ் அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் அம்சங்களை பெற்று பயனடைகின்றனர். வாட்ஸ்அப் இந்தியாவின் சிஇஓ அபிஜித் போஸ், வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய திட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும், இதற்காக SBI ஜெனரல் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி “sachet” என்ற புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி அறிமுகம் செய்யப்படு. மேலும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பென்ஷன் திட்டமும் கூடுதலாக வழங்கப்படும் என்றார்.