கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்று நாடு முழுவதும் குறைந்து வருவதால் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், பீகார்,புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா முழுமையாக குறைந்தால் தான் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும். கொரோனாவின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் பெற்றோர் – மாணவர்களிடம் மீண்டும் கருத்து கேட்கப்படும் என்றார்.