தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து கபரவல் சற்று குறைந்த நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் தற்போது அரசு மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அச்சம் நிலவி உள்ளது. பீகார், புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில், பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா தொற்று குறைந்தால் தான் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும். தொற்றின் நிலை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் பெற்றோர், மாணவர்களிடம் மீண்டும் கருத்து கேட்கப்படும் என்றார்.