போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு சென்னையில் புதிய முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்துக்கள் ஏற்படும் போது உயிர்காக்கும் கவசமாக ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் இருக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் விதிமுறைகளை மீறி வருகின்றனர். இருப்பினும் காவல்துறையினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஹெல்மெட், கார்களில் சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு சென்னையில் “Zero Violation Junction” என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய சிக்னல்களில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர். விதியை மீறி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.