Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்… மதுபோதையில்… பிறந்த நாளே இறந்த நாளான பரிதாபம்..!!

வேலூரில் ராணுவ வீரரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் உள்ள காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதுடைய யோகராஜ் . அதே ஊரை சேர்ந்தவர்  23 வயதுடைய தீபக். ராணுவ வீரர்களான இவர்கள் இருவரும்  சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் பணியாற்றி வந்தனர். யோகராஜ் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக இருவரும்  கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளனர். இன்று யோகராஜின்  பிறந்தநாள் என்பதால் அவரிடம் தீபக் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் நேதாஜியும்  மதுவிருந்து கேட்டுள்ளனர்.

நேற்று  இரவு காட்பாடி ரயில்வே  கேட் அருகே யோகராஜின் பிறந்தநாள் விழாவை 3 பேரும் மது அருந்தி கொண்டாடினர் . இரவு 10 மணிக்குப் பிறகு  மது தீர்ந்து விட்டதால் மேலும் மது வாங்குவதற்காக 3 பேரும் கழிஞ்சூர்  மெயின் ரோட்டில்  சென்று கொண்டிருந்தனர் . அப்போது இவர்களுக்கு எதிரே  மூன்று பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். திடீரென இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த அந்த மூன்று பேர் கொண்ட கும்பல் யோகராஜ், தீபக் ,நேதாஜி ஆகியோரை கத்தியால் சரமாரியாக தாக்கியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் . அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் காவல்துறையினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யோகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் . மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |