Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் உச்சகட்டம்… கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுவை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |