Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் எப்படி இதை செய்வேன்”…. வேதனையாக இருக்கிறது…. ரக்சன் பேட்டி…!!

சித்ரா மரணத்திற்கு நான் காரணமில்லை என்று ரக்சன் பேட்டி ஒன்றில் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தன்னுடைய கணவர் ஹேம்நாத் என்பவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவருடைய வருங்கால கணவர் தான் என்று உறுதி செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து சித்ரா விஜய் டிவி தொகுப்பாளரும், நடிகருமான ரக்சன் என்பவருடன் டேட்டிங் சென்றதாகவும், சித்ராவுடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்த அவரை மிரட்டியதாகவும் தகவல் பரவ தொடங்கியது.

இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதால், பலரும் ரக்சனா இப்படி? என்று பலர் முகம் சுளிக்கும் அளவுக்கும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு ரக்சன் தற்போது பதில் அளித்துள்ளார். அதாவது, “விஜய் டிவி ஷூட்டிங்கின்போது சித்ராவை நான் சில முறை சந்தித்திருக்கிறேன். என்னை வைத்து சித்ராவின் மீது தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது முழுவதும் பொய்யான செய்தி. ஒரு பொய்யான வதந்தியை பரப்பினால்  சம்மந்தப்பட்டவருக்கு எவ்வளவு வேதனையையும், வலியையும் கொடுக்கும் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

இன்று சித்ரா உயிருடன் இருந்தால் எனக்கு சாட்சியாக இருந்திருப்பார். நான் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. நான் பணம் சம்பாதிக்கவில்லை. நான் சம்பாதிப்பதெல்லாம் பெயர் மட்டும் தான். அதையும் இப்படி கெடுத்து வருகிறார்கள். தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம். நான் கஷ்டத்தில் வளர்ந்தவன். எப்படி இந்த மாதிரியான ஒரு காரியத்தை நான் செய்வேன். சித்ராவின் இறுதி சடங்கிற்கு நான் கூட சென்ற போது ஹேமந்த் குறித்து தான் குறை பேசிக் கொண்டிருந்தோம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |