சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நவம்பர் 9ஆம் தேதி கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மீட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை பார்த்து வருகிறார். மனைவி சக்தி. இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும், மூன்றரை வயதில் சந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கோயம்பேடு கடை பகுதியில் குடும்பத்துடன் நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் படுத்து தூங்கி இருந்தன. ஆனால் அதிகாலை எழுந்து பார்த்த போது தன்னுடன் படுத்து இருந்த குழந்தையை காணவில்லை. இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கில் 5 காவலர்கள் உட்பட 6 பேர் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர். கோயம்பேடு முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை 600 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கண்காணித்து குற்றவாளியை கைது செய்தனர். சிசிடிவி கேமராவில் ஒரு பெண்மணி கையில் குழந்தையுடன் ஆட்டோவிலிருந்து இறங்கி ஓரிடத்தில் குழந்தையை விட்டுச் செல்வது பதிவாகி இருந்தது. மேலும் அந்த ஆட்டோவில் ஓட்டுநர் மற்றும் மேலும் இருவர் இருந்தது கண்டறியப்பட்டது.
ஆட்டோ செல்லும் வழித்தடத்தை அடிப்படையாக வைத்து 600 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை கண்டுபிடித்தனர். சரி வழித்தடத்தில் பல ஆட்டோக்கள் செல்லும் அதில் இந்த ஆட்டோ என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கலாம். இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் அந்த ஆட்டோவின் முன்பக்க ஹெட்லைட் உறைந்திருந்தது. அதனால் ஆட்டோ நள்ளிரவு முழுவதும் முன் விளக்கு இல்லாமலேயே சென்றிருந்தது.
மேலும் அனைத்து கேமராக்களும் முன் விளக்கு இல்லாமல் சென்ற ஆட்டோவை பின்பற்றி அந்த குழந்தை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். இதில் குழந்தை குழந்தையை கடத்தி சென்றவர்கள் ஏன் நடுரோட்டில் விட்டு சென்றார்கள் என்றால், அம்பத்தூரில் உள்ள குழந்தை இல்லாத தம்பதியருக்கு 15 லட்சத்திற்கு குழந்தையை விற்க இந்த கும்பல் முயற்சித்து குழந்தையை கடத்தியது தெரியவந்தது. பின்னர் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டிய தம்பதியர்கள் குழந்தையின் தாய் தந்தையை பார்த்தால்தான் குழந்தையை வாங்குவேன் என்று கட்டாயமாக கூறியதால் அந்த வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.